அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. அப்செட்டில் இபிஎஸ்!!

0
115
AIADMK-tvk alliance did not negotiate.. EPS in upset!!
AIADMK-tvk alliance did not negotiate.. EPS in upset!!

ADMK TVK: தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அலையின் மூலம், தமிழக அரசியலே அதிர்ந்து போயுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த கட்சி யாருடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என்பது தற்போது வரை கேள்வி குறியாக உள்ளது. தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை விஜய்யுடன் கூட்டணி அமைக்க போராடி வருகின்றன. அதிமுகவும், பாஜகவும், கரூர் விவகாரத்தில் விஜய்க்கு நேரடியாக உதவி வருவதும், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதும், சட்டசபையில் தவெகவின் குரலாக ஒலிப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

காங்கிரஸ் கட்சி விஜய்க்கு மறைமுகமாக உதவி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், பாமக, தேமுதிகவின் கூட்டணி முடிவுகளும் விஜய்யின் முடிவை பொறுத்து தான் அமையும் என்றும் கூறப்பட்டது. கட்சி ஆரம்பித்து ஒன்றரை வருடத்தில் இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் திராவிட கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறிவிடுவார் என்ற கருத்தும் நிலவியது. இது ஒரு புறம் இருக்க, அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடி பறந்ததை கண்ட இபிஎஸ், பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார். இவரின் இந்த பேச்சு அதிமுக- தவெக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானது என்பது போன்ற கருத்துக்களுக்கு வழிவகுத்தது.

இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொதுச்செயலாளர் தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று கூறியிருந்தார். இதனால் விஜய்க்கு அதிமுக கூட்டணியில் இணைய விருப்பமில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார் கூறிய பதிலால் அப்செட்டாக இருந்த இபிஎஸ்யிடம் விஜய் கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, விஜய்யுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை, விஜய்யும் எங்களுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என்று கூறி பகிர் கிளப்பினார்.

இபிஎஸ்யின் இந்த திடீர் மாற்றம், நிர்மல் குமாரின் கருத்தால் எழுந்த எதிர் வினையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது நாள் வரை அமைதியாக இருந்த இபிஎஸ், நிர்மல் குமார் பேசிய பிறகு, அதிமுக-தவெக கூட்டணி குறித்து இவ்வாறான கருத்தை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Previous articleதவெகவுடன் கூட்டணியா இல்லையா.. முடிவு செய்ய வேண்டியது நாங்க தான்.. விஜய் இல்ல.. சுளீரென்று கூறிய அமித்ஷா!!