ADMK TVK BJP: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து கட்சிகளாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி கை கோர்த்து விட்டது. ஆனாலும் அவர்களுக்குள் வெளிவராத பல்வேறு சலசலப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.
தற்போது நடிகர் விஜய்யின் தவெக உதயமாகி உள்ள நிலையில், பாஜகவும் அதிமுகவும், தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் விஜய் பாஜகவை தனது கொள்கை எதிரி என்று கூறி வருவதால் இதனை ஏற்க மறுக்கிறார். இந்த சமயத்தில் பாஜக அதிமுகவிடம் அதிக தொகுதிகளையும், கொங்கு மண்டலத்தையும் கேட்டதாகவும் இதற்கு இபிஎஸ் மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் இபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகி விடலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம். மேலும், ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் சில சச்சரவு நிலவி வருவதாலும், தவெகவின் வளர்ச்சி பெருகி வருவதாலும் இபிஎஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில் அதிமுக பிரச்சாரத்தில், தவெக கொடி பறந்ததை பலரும் விமர்சித்து வந்தனர்.
அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவெக அதிமுக கூட்டணிக்கு வந்தால் இபிஎஸ் பாஜகவை கழட்டி விட்டு விடுவார் என்று கூறியிருந்தார். தற்போது இபிஎஸ்யின் நிலைப்பாடு தினகரனின் வாதத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.