மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா…பள்ளிகளுக்கு விடுமுறை விட அதிமுக வலியுறுத்தல்!!

0
3

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றது. இந்தியாவில் 3961 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை, மும்பை ,அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதுச்சேரி வழியாக சென்னை, கடலூர், மகாபலிபுரம் ரயில் வழித்தட திட்டம் புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் எடப்பாடி யார் ஆட்சியின் பொழுது மத்திய அரசிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் மத்திய ரயில்வே அமைச்சகம் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு ரயில் பாதை அமைக்க அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தரும் நிலையில் இரும்பல், சளி, தும்பல், அதிகளவு காணப்படுகின்றது. புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம், புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறையும் சுகாதார துறையும் இதற்கு அலட்சியம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

Previous articleஉதயநிதிக்கு மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்.. திடீரென அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!!
Next articleசென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…பொதுமக்கள் பீதி!!