ADMK: ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக பழைய நிலைக்கு செல்ல மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த ஒற்றுமை இபிஎஸ் பதவியேற்ற பிறகு இல்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக தொண்டர்களே கூறியுள்ளனர். முன்னாள் தலைவர்களின் காலத்தில், கட்சியினுள் சச்சரவு எழுந்தாலும் அதனை வெளியில் செல்ல விடாமல் கட்சிகுள்ளேயே தீர்த்து வந்தனர். ஆனால் தற்போது வரும் பிரச்சனைகள் அனைத்தும் அதிமுகவிற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரின் பிரிவு அமைந்தது.
இதனை தொடர்ந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் தான் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கூறி இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்த மூத்த அமைச்சர் செங்கோட்டையனியன் பதவியை பறித்தது மட்டுமல்லாமல், அடிப்படை உறுப்பினர் போன்ற அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டார். இபிஎஸ்யின் இந்த செயலால் அவருக்கு தலைமை வெறி தலைக்கேறி விட்டது என்று பலரும் கூறி வந்தனர். இதனை மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் விதமாக செங்கோட்டையனியனின் ஆதரவாளர்களான சத்தியபாமா உள்ளிட்ட 12 பேரின் பதவிகளும் கட்சியின் அடிமட்ட தொண்டன் போன்ற அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டது.
சத்தியபாமா அதிமுக மகளிர் பிரிவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். மேலும் திருப்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவை இரண்டும் கொங்கு மண்டலங்களாக அறியப்படும் நிலையில் இவரின் கட்சி நீக்கம் அதிமுகவிற்கு எதிர் காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிமுகவிற்கு தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் இபிஎஸ் மீது அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் அதிமுக கொங்கு மண்டலத்தின் கோட்டையாக கருதப்படும் நிலையில் இவர்களின் தொடர் நீக்கம் 2026 தேர்தலில் அப்பகுதியில் அதிமுக தோல்வியை சந்திக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

