ADMK TVK: அரசியல் களத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அதிமுக, தவெகவிற்கு இணையாக தமிழகத்தில் ஒரு கட்சி உதயமாகியுள்ளது என்றால் அது தவெக எனலாம். கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் களத்தில் குதித்துள்ள தவெக நவம்பர் 5 ஆம் தேதி, முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக உடன் தவெக கூட்டணி அமையும் என்று எதிர்பார்த்த சமயத்தில், தவெகவை சேர்த்த நிர்மல் குமார் இதை மறுத்திருக்கிறார்.
மேலும் திமுக தான் தனது அரசியல் எதிர் என்று கூறிய விஜய் தற்போது அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை குறிவைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், விஜய் தனது முதல் பிரச்சாரத்திலேயே, 1977 யில் எம்ஜிஆர் பெற்ற வெற்றியை போல, 2026 தேர்தலிலும் மாற்றம் நிகழும் என கூறியுள்ளார். மேலும் எம்ஜிஆர் போன்ற மாமனிதருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் அவரை போன்ற குணமுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். விஜய்யின் இந்த எம்ஜிஆர் பற்றிய தொடர் பேச்சு அதிமுக வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவை எதிரி என்று கூறிய அவர், அதிமுக பக்கம் திரும்பியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். மேலும், விஜய்யின் இந்த செயல் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறுவது என்னவென்றால், எம்ஜிஆர் சினிமாவில் நடித்து மட்டும் அரசியலுக்கு வரவில்லை, கட்சியை தொடங்கும் முன் 20 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றி பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். விஜய் இன்னும் எந்த தேர்தலையும் சந்திக்கவில்லை, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் போதிய அரசியல் அனுபவம் இல்லை, இப்படி இருக்க விஜய் எவ்வாறு 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

