ADMK PMK: அடுத்த 5, 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் அதற்கான பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது. மேலும் அதிமுக, திமுக கட்சிகள் மக்களை சந்திக்கும் வேலையில் மும்முரமாக உள்ளன. மத்திய அரசு அமல்படுத்திய SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கு, தலைவர் அன்புமணிக்கு தலைமை போட்டி ஆரம்பித்தது. இந்த சண்டை மேலும் தீவிரமடைந்து கொண்டே சென்றதால், அன்புமணி ராமதாஸால் பதவி நீக்கம் செய்யபட்டார்.
இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் நெருங்கும் சமயத்தில் தலைமை போட்டி அதிகரித்து வரும் வேளையில், வேட்புமனுவில் கையெழுத்திடுவது யார் என்பதில் பிரச்சனை ஏற்படும். அதனால் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இவ்வாறு பாமகவில் தொடர் பிரச்சனை எழுந்து வருவதால், அக்கட்சி யாருடையது என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
மேலும் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற விவாதமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அன்புமணி அதிமுகவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால், அவர் அதிமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பாமகவின் செய்தி தொடர்பாளர் பாலு தற்போது அன்புமணி பக்கம் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக சார்பில் போராட்டம் நடத்துவதற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போராட்டத்திற்கான முதல் அழைப்பு அதிமுகவிற்கு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஏற்கனவே பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா அன்புமணியை சந்தித்து பேசியது கூட்டணி குறித்த பேச்சுவார்தையாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்த சமயத்தில், பாலுவின் செயல்பாடும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவர் என்று அங்கீகரித்ததால் இபிஎஸ், ராமதாஸை கண்டு கொள்ளவில்லை என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

