விஜயகாந்திடம் காண்பித்த வியூகத்தை விஜய்யிடமும் முயற்சிக்கும் அதிமுக.. சிக்குவாரா விஜய்!!

0
158
AIADMK will try the strategy shown to Vijayakanth.. Chikuwara Vijay!
AIADMK will try the strategy shown to Vijayakanth.. Chikuwara Vijay!

ADMK  TVK: தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களிலேயே தவெகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விஜய்யுடன் கூட்டணியில் சேரும் கட்சி தேர்தலில் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வர வாய்பிருக்கிறது. இதன் காரணமாக அதிமுக தவெகவை கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது.

இதற்கு விஜய்யும் அரைமனதாக சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் விஜய் அதிமுக தலைமையின் கீழ் கூட்டணியில் சேர்ந்தால் அவருக்கும் விஜயகாந்தின் நிலைமை தான்  ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது அக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் பிறகு 2011 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்தது. 234 தொகுதிகளில் தேமுதிகவிற்கு  41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று, அதிமுக 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிறகு, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.

ஆனால் அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதிமுக தரப்பிலிருந்து, விஜயகாந்த்  கட்சிக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், சட்டசபையில் தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பல முறை அவமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், கூட்டணியில் விஜயகாந்தின் கருத்துக்கு அதிமுக செவி சாய்க்காமல் அவமதித்தனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகினர்.

இதனை தொடர்ந்து, 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-அதிமுக கூட்டணி முறிவு அடைந்தது. அதிமுகவில் தங்களுக்கு பல்வேறு துரோகங்கள் நிகழ்ந்து விட்டதாக விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளனர். இந்த வியூகத்தை விஜய்யிடமும் பயன்படுத்தலாம் என்று அதிமுக திட்டம் தீட்டுவதாக தெரிகிறது. விஜய்க்கு ஆதரவு அதிகம் இருப்பதால் தேர்தல் நேரத்தில் கூட்டணி என்று கூறிவிட்டு வெற்றி பெற்ற பிறகு விஜய்யை கூட்டணியிலிருந்து புறக்கணிக்கலாம் என்று அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 

Previous articleஅபேஸ் ஆகும் அதிமுக கோட்டை.. தவிக்கும் எடப்பாடி பழனிசாமி!!
Next articleநான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கிளம்பியுள்ளனர்.. விஜய் பேரை சொல்வதற்கு கூட அஞ்சும் திமுக கூட்டணிகள்!!