கோயமுத்தூரில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு! கலக்கத்தில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் பகுதியிலே, திமுக சார்பாக மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற்ற ஸ்டாலினிடம் அதிமுகவைச் சேர்ந்த மகளிர் அணி துணைத் தலைவர் பூங்கொடி வாக்குவாதம் செய்து இருக்கின்றார். இதன் காரணமாக, கோபமுற்ற திமுகவினர் அவரை தாக்கியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பூங்கொடி ஆதரவாக வந்த முனி, பூங்கொடி, மகேஸ்வரி, ராஜன் உள்ளிட்டோரும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தால், ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார். இந்த மனு மீது விசாரணை செய்த தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள், இந்த விவகாரம் குறித்து 15 தினங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக டிஜிபி, மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், போன்றோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.