ADMK BJP: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளிலும், மக்களை சந்திக்கும் பணிகளிலும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தேசிய கட்சியான பாஜக, பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழக தேர்தலில் கவனத்தை திருப்பியுள்ளது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவுகளை சீரமைக்கவும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவிற்கான தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ஆராயவும், டெல்லி மேலிடம் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயிலை நியமித்திருந்தது. அண்மையில் தமிழகம் வருகை புரிந்த இவர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பேசியிருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பாஜவிற்கு 23 தொகுதிகள், தேமுதிகவிற்கு 6 தொகுதிகள், ஓபிஎஸ், தினகரனுக்கு குறிப்பிட்ட தொகுதிகள் என நிர்ணயிக்கபட்டதாக தகவல் கசிந்தது.
இதனை இவர்கள் மூவரும் அறவே மறுத்த நிலையில், பியூஷ் கோயல் அமித்ஷாவிடம் இபிஎஸ்யிடம் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி கலந்துரையாடியுள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்புக்கும், தேர்தல் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை என கூறியுள்ளார். மேலும் பாஜகவின் நிபந்தனைகளுக்கும் அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால், இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக முன்னேறாது என்று அவர் கூறியுள்ளாராம். இதனால் டெல்லி மேலிடம் இபிஎஸ் மீது கடும் அதிருப்த்தியில் உள்ளதாக பலரும் கூறுகின்றனர்.