ADMK TVK: இன்னும் 5, 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் தீவிரமாக உள்ளது என்றே கூறலாம். இதற்கான முக்கிய காரணம் விஜய்யின் வருகை என்றே பார்க்கப்படுகிறது. கட்சி ஆரம்பித்து இன்னும் 2 வருடங்கள் கூட முழுமை பெறாத நிலையில், தவெகவுக்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு அதிகரித்து உள்ளது. புதிய கட்சிக்கு இவ்வளவு ஆதரவு பெருகியுள்ளதை பலரும் விமர்ச்சித்தனர்.
அதோடு தவெகவின் தலைவருக்கு அரசியல் அனுபவம் இல்லை, தொண்டர்கள் அரசியலை பற்றி அறியாதவர்கள், தற்குறிகள் என பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார்கள். மேலும் கரூரில் நடைபெற்ற நிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், தவெகவுக்கு அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் தேவை என விஜய் உணர்ந்தார். இந்நிலையில் தான் அதிமுகவிலிருந்து, செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் அடுத்து என்ன செய்ய போகிறார் என அரசியல் களமே உற்று நோக்கி கொண்டிருந்தது.
இதன் பின்னர் நால்வர் அணியில் இணைந்த இவர், திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார். தவெகவில் சேர்ந்த கையுடன் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து இன்னும் பலர் தவெகவில் இணைய போகிறார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுகவின் கடலூர் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர், S.அபித் பத்மாவதி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். செங்கோட்டையனை தொடர்ந்து இவர் தவெகவில் இணைந்துள்ளது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

