உணவுகளை மதம் அடிப்படையில் பிரித்து காட்டும் ஏர் இந்தியா! வன்மையாக கண்டித்த காங்கிரஸ் எம்.பி!
தற்பொழுது ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களில் வழங்கப்படும் உணவுகளை இந்து உணவு என்றும் இஸ்லாமிய உணவு என்றும் வகைப்படுத்தி வெளியிட்ட உணவு பட்டியல் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.
பல வருடங்களாக அரசின் கையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2022ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. அப்பொழுதிருந்தே ஏர் இந்தியா நிறுவனம் பல பணியாளர்களை நீக்கி வந்தது. இதற்கு பத்தியில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து நியூஜெர்சிக்கு பயணம் செய்த வினீத் என்ற பயணி ஏர் இந்தியா விமானத்தில் தான் எதிர்கொண்ட மோசமான சம்பவத்தை பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
சாப்பிட முடியாத அளவில் இருக்கும் மோசமான சாப்பாடு, உட்கார முடியாத அளவில் இருக்கும் இருக்கை, தாமதமாக வருகை, லக்கேஜ் உடைப்பு, தாமதமான பயணம் என மொத்தமாக திகில் கதையாக இருந்தது ஏர் இந்தியாவின் இந்த விமானப் பயணம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதை தொடர்ந்து தற்பொழுது காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் ஏர் இந்தியாவின் உணவு பட்டியலை பகிர்ந்து வன்மையாக கண்டித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் “உணவுகளை ஹிந்து மீல்ஸ் என்றும் இஸ்லாமிய மீல்ஸ் என்றும் வகைபடுத்துவதா? இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.