ஈராக்கில் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்! அதிரடி முடிவெடுத்த ஈராக் ராணுவம்!

0
95

சென்ற 2014ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள்.

இதனால் பல உலக நாடுகள் தங்களுடைய ராணுவங்களை உஷார்ப்படுத்தின, அதோடு ராணுவ பலத்தையும், ஆயுத பலத்தையும், அதிகப்படுத்த தொடங்கினார்கள்.

இதே போன்று இந்தியாவும் தன்னுடைய ராணுவ மற்றும் ஆயுத பலத்தை அதிகப்படுத்த தொடங்கியது. மேலும் பல்வேறு வல்லரசு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வேலையிலும் இறங்கியது மத்திய அரசு.

இந்த நிலையில் ஈராக்கில் மிகக் கடுமையான ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கம் கடந்த 2017ஆம் வருடம் அமெரிக்கப் படைகளின் உதவியுடன் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் சமீப காலமாக அங்கு மீண்டும் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது.

குறிப்பாக அந்த நாட்டின் வடக்கு பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் தீவிரமாக போராடி வருகிறது. அந்த விதத்தில் வடக்கு மாகாணம் நினிவேவில் இருக்கின்ற ஹத்ரா பாலைவனத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் அதிரடியாக வான் தாக்குதலை நடத்தியது.

இதில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களுடைய தலைமையகமாக பயன்படுத்திவந்த 140 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குகை குண்டு வீசப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் இதில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டதாக தெரிகிறது.