தனுஷ் உடனான விவாகரத்திற்கு பின் ஐஸ்வர்யாவின் நிலை!

Photo of author

By Sakthi

நடிகர் தனுஷ் தொடர்பாக இவரெல்லாம் ஒரு நடிகரா? என்று தொடக்கத்தில் உரையாற்றியவர்கள் தற்சமயம் வாய் பிளந்து அவருடைய நடிப்பை பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய சினிமா புகழின் உச்சத்தை எட்டியிருக்கிறது. அடுத்தடுத்து தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

சமீபத்தில் அவர் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஆன 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அவர்களை பற்றி பேசுவதைவிட தமிழக ரசிகர்கள் ரஜினிக்கு ஏன் இந்த வயதில் துன்பங்கள் கொடுக்கிறீர்கள் என்று தான் பேசிவருகிறார்கள்.

இருவரும் அவரவர் வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஐஸ்வர்யா ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒன்றாக இணைந்து இசை ஆல்பத்தை உருவாக்க இருக்கின்றார். அந்த ஆல்பத்திற்கான பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் நடைபெற்று இருக்கிறது. அதில் பங்கேற்று கொண்ட போது எடுக்கப்பட்ட ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.