வாகா எல்லையில் தல அஜித் குமார்! தேசிய கொடி மற்றும் பாதுகாப்பு படையினருடன் புகைப்படம்!

0
55
Ajit Kumar at the Wagah border! Photo with National Flag and Security Forces!
Ajit Kumar at the Wagah border! Photo with National Flag and Security Forces!

வாகா எல்லையில் தல அஜித் குமார்! தேசிய கொடி மற்றும் பாதுகாப்பு படையினருடன் புகைப்படம்!

நடிகர் அஜித் குமார் இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவிற்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரளாகி வருகின்றன. மேலும் அவர் வலிமை பட ஷூட்டிங் முடிந்த கையோடு தனது பைக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

அவர் ஒரு பைக் ரேசர் எனபது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் இதே போல பல இடங்களுக்கு செல்ல திட்டம் இட்டு இருந்தார் போல. அதன் காரணமாக அதில் ஒரு பகுதியாக இவரைப் போலவே மற்றொரு பைக் ரேஸர் ஆன ஒரு பெண்ணை சந்தித்து பேசினார். அப்போது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வந்தன.

மேலும் அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார். அந்த புகைப்படங்களும் இணையத்தை தெறிக்க விட்டன. அதன் பின் யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென்று நேற்று இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாப் மாநிலம் வாகாவிற்கு பைக்கில் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினருடன் அவர் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

மேலும் தனது கையில் தேசியக் கொடியை ஏந்தியவாறு எல்லையில் அவர் நின்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.