அந்த நடிகையுடன் இருட்டுக்குள்ள போய்விடுவாரு அஜித்!.. இப்படி லீக் பண்ணிட்டாரே!…

Photo of author

By அசோக்

அந்த நடிகையுடன் இருட்டுக்குள்ள போய்விடுவாரு அஜித்!.. இப்படி லீக் பண்ணிட்டாரே!…

அசோக்

ajith

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டவர். பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராகவும் மாறினார். தொடர்ந்து மாஸ் நடிகராக நடித்து வருகிறார்.

விடாமுயற்சி படத்தில் மாஸ் எதுவும் காட்டாமல் நடித்திருந்தார். இதனால் இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதேநேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. இந்த படம் 250 கோடி வரை வசூல் செய்து ஹிட் படமாக அமைந்துவிட்டது.

நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அஜித் கார் ரேஸ், பைக் ரேஸ் என கலக்கி வரும் நிலையில் அவரின் மகன் ஆத்விக்கும் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அஜித் 3 தனது வாழ்வில் 3 காதல்களை கடந்து வந்திருக்கிறார். முதலில் அஜித் காதலித்தது நடிகை ஸ்வாதியை. வான்மதி படத்தில் நடிக்கும்போது அவரை காதலித்தார். ஆனால், அது கை கூடி வரவில்லை. அதன்பின் காதல் கோட்டை படத்தில் நடித்தபோது ஹீராவை காதலித்தார். அதுவும் திருமணத்தில் முடியவில்லை.. அதன்பின்னரே அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ajith

இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் வலைப்பேச்சு பிஸ்மி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அஜித்தின் மூன்று காதல்களையும் பத்திரிக்கையில் முதலில் சொன்னது நான்தான். அஜித் காதல் கோட்டை படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அந்த படத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் வேலை செய்துவந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அஜித் – ஹீரா காதல் பற்றி பல விஷயங்களை என்னிடம் பேசினார். எல்லாவற்றையும் ரெடி பண்ணி அஜித் – ஹீராவை தேடினால் அவர்கள் இருக்க மாட்டார்கள். இருட்டான பகுதிக்கு ஹீராவை தள்ளிகொண்டு போய் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். அவர்களை வைத்து ஷூட்டிங் நடத்துவதே படாதபாடாக இருக்கிறது’ என சொன்னார்’ என கூறியிருக்கிறார்.