தீனா பட வெளியீட்டில் விஜயின் பேனரை கிழித்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! 

0
127
Ajith fans celebrated by tearing Vijay's banner at the release of Deena! Viral video on the Internet!
Ajith fans celebrated by tearing Vijay's banner at the release of Deena! Viral video on the Internet!
தீனா பட வெளியீட்டில் விஜயின் பேனரை கிழித்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
நடிகர் அஜித் நடிப்பில் ரீ-ரிலீஸ் ஆன தீனா திரைப்படத்தின் வெளியீட்டின் பொழுது நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படத்தின் பேனரை அஜித் ரசிகர்கள் கிழிக்கும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் அவர்கள் நடித்த தீனா திரைப்படம் கடந்த 2001ம் ஆண்டு வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படம் அப்பொழுது மிகப்பெரிய வெற்றி பெற்றது.
நடிகர் அஜித் அவர்களை ஆக்சன் ஹீரோவாக மாற்றியத்தில் தீனா திரைப்படத்திற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. இதற்கு மத்தியில் தற்பொழுது பழைய திரைப்படங்கள் அதிக அளவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. இது ஒரு டிரெண்டாக மாறி வருகின்றது.
நடிகர் அஜித் அவர்கள் இன்று(மே1) 53வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இன்று(மே1) தீனா திரைப்படம் தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் அவர்களின் பேனரை நடிகர் அஜித் ரசிகர்கள் கிழித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது.
https://twitter.com/EliteAJITHIANS/status/1785565096573632642?s=19
சென்னையில் உள்ள திரையரங்குகளில் மிகவும் பிரபலமான ரோகினி திரையரங்கில் தீனா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித் ரசிகர்கள் திரையரங்குக்குள் பட்டாசு வெடித்தனர். மேலும் திரையரங்கில் வெளியே கூடிய நடிகர் அஜித் ரசிகர்கள் அனைவரும் நடிகர் அஜித் அவர்களின் பேருக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து மேளம் அடித்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உடன் இருந்த ஒரு சில ரசிகர்கள் அருகே வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் அவர்களின் கில்லி திரைப்படத்தின் பேனரை கிழித்து எறிந்தனர். நடிகர் அஜித் அவர்களின் ரசிகர்கள் செய்த இந்த செயல் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் அவர்களின் கில்லி திரைப்படத்தின் பேனரை அஜித் ரசிகர்கள் கிழிப்பதை வீடியோ எடுத்த ஒரு நபர் சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலான நிலையில் வீடியோ பார்க்கும் அனைவரும் நடிகர் அஜித் ரசிகர்கள் செய்த இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.