சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.
விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. இந்நிலையில்தான், பத்மபூஷன் விருது அஜித்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றார் அஜித். இன்று மாலை ஜனாதிபதி கையில் விருதையும் அஜித் வாங்கினார். அவர் விருது வாங்கியபோது அவரின் மனைவி ஷாலினி மற்றும் மகன், மகள் என எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். இந்நிலையில், அஜித் விருது வாங்கிய வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
இதையடுத்து குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் அஜித்துக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
#AjithKumar has been conferred the Padma Bhushan, the third-highest civilian award, by President Droupadi Murmu.#PadmaBhushanAjithKumar pic.twitter.com/VvwCYN8niT
— Gulte (@GulteOfficial) April 28, 2025