Breaking News

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்!.. அடுத்த ஹிட்டு பார்சல்!..

ajith vidaamuyarchi

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருந்தார் இயக்குனர் ஆதிக்.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. படத்தில் அழுத்தமான கதையோ, செண்டிமெண்டோ, லாஜிக்கோ இல்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை அஜித் என்கேஜாக வைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 250 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஒருபக்கம், அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்கிற எதிர்பார்ப்பும் அஜித் ரசிகர்களிடம் இருக்கிறது. சிறுத்தை இயக்கத்தில் 4 படங்களில் நடித்தது போல, ஹெச்.வினோத் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடித்தது போல சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் அஜித் இன்னொரு படம் நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

ஒருபக்கம் அஜித்தை வைத்து நடிகர் தனுஷும் ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவது உறுதியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளதாம்.