நடிகர் அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபலம்! எகிறும் வலிமை திரைப்படத்தின் எதிர்பார்ப்பு!

Photo of author

By Sakthi

அஜித் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின்னர் உருவாகிவரும் திரைப்படம் தான் வலிமை கடந்த 2019 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வலிமையை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வரையில் முடிவடையவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில் சுவாரசியம் என்னவென்றால் இது வரையில் அந்த திரைப்படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்புகள் எடுக்கப்படாமல் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய செலவில் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் இரண்டாயிரத்து 21ஆம் ஆண்டு வெளியீட்டு தேதி குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் தற்சமயம் ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக, மறுபடியும் வலிமை திரைப்படத்திற்க்கான வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அனேகமாக 2021 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்த திரைப்படம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். அதோடு அஜித்துடன் ஏற்கனவே வீரம், வேதாளம் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் காமெடி கூட்டணியாக யோகி பாபு வலிமை திரைப்படத்திலும் அவருடன் ஒன்றிணைந்து நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த கூட்டணி நான்காவது முறையாக சேர்ந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்தாலும் கூட அண்மையில் நடிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் தெரிவித்த யோகிபாபு இதனை உறுதி செய்து இருக்கின்றார். கண்டிப்பாக வலிமை திரைப்படத்திலும் நல்ல காமெடி காட்சிகள் இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார் நடிகர் யோகிபாபு.