Good bad ugly: விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக்.
இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. படத்தில் அழுத்தமான கதையோ, செண்டிமெண்டோ, லாஜிக்கோ இல்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை அஜித் என்கேஜாக வைத்திருக்கிறார்.
எனவே, அவருக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே இப்படம் 30.9 கோடி வசூலை அள்ளியது. மேலும், அஜித்தின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் நாள் அதை விட இரண்டு மடங்களாக வசூல் செய்து மொத்த வசூல் 90 ஆடி ஆனது. இப்போது 3 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இப்படம் 118 கோடியை தாண்டி இப்படம் வசூலை பெற்றிருக்கிறது.
இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. எனவே, ஆதிக் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பார் என பலராலும் சொல்லப்பட்டு வருகிறது.