பைக் ரேஸுக்கு போறேன்னு சொன்னதும் என் அப்பா இதைத்தான் சொன்னார்!.. அஜித் சொல்லும் பிளாஷ்பேக்!…

Photo of author

By அசோக்

பைக் ரேஸுக்கு போறேன்னு சொன்னதும் என் அப்பா இதைத்தான் சொன்னார்!.. அஜித் சொல்லும் பிளாஷ்பேக்!…

அசோக்

ajith

கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் ஏகே எனும் அஜித்குமார். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. சமீபத்தில் பத்மபூஷன் விருதை ஜனாதிபதி கையில் வாங்கியிருக்கிறார் அஜித். 20 வருடங்களுக்கு முன்பு நிறைய பைக் ரேஸ்களில் கலந்துகொண்டார் அஜித். அதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் நிறைய அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.

ajith bike

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய அஜித்குமார் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்த விளையாட்டு என என் அப்பா சொன்னார். நான் உனக்கு நிதியுதவி செய்ய முடியாது. ஆனால், நான் உன்னை தடுக்க மாட்டேன். நீ மோட்டார் ஸ்போர்ட்ஸ் மேல எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என எனக்கு தெரியும். உனக்கான வழியை நீயே கண்டுபிடிக்க வேண்டும் என சொன்னார்.

விதியை பாருங்கள். நான் ரேஸ் டிராக்கில் இருந்தபோது ஒரு மாடல் ஒருங்கிணைப்பாளர் என்னை அணுகி ஒரு விசிடிங் கார்ட் ஒன்றை கொடுத்து ‘மாடலிங்கில் ஆர்வம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என சொன்னார். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சரி முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தேன். இது எனக்கு புரிவதற்குள் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. பிரிண்ட் விளம்பரங்கள், டிவி விளம்பரங்கள், மாடலிங் மூலமாக சம்பாதித்த பணம் அனைத்தையும் என் ரேஸிங்குக்காக செலவு செய்தேன்’ என பேசியிருக்கிறார்.