மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கிறது பாஜக!! அகிலேஷ் யாதவ் அதிரடி குற்றச்சாட்டு!!

0
82
Akhilesh Yadav Alleges 'Shahi Jama' Masjid Riots Conspiracy by BJP
Akhilesh Yadav Alleges 'Shahi Jama' Masjid Riots Conspiracy by BJP

Uttar Pradesh:உத்திரப் பிரதேசத்தில் ‘ஷாஹி ஜமா’ மசூதி கலவரம் என்பது பாஜகவின் திட்டமிட்ட சதி அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு வைத்து உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் சம்பல் மாவட்டத்தில் உள்ள ‘ஷாஹி ஜமா’ மசூதி இந்து கோவிலை இடித்து கட்டி இருக்கிறார்கள் என்றும் அந்த மசூதியை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தார்கள். இந்த வழக்கு அடிப்படையில் ‘ஷாஹி ஜமா’ மசூதியில் இந்து கோவில்களில் இருக்கும் சாமி சிலைகள் இருக்கிறதா? என ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட அட்சியர்கள் முன்னிலையில் ‘ஷாஹி ஜமா’ மசூதி  ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றார்கள். அப்போது அதிகாரிகள் மீது கற்களை வீசி மசூதிக்குள் நுழைவதை எதிர்த்து இருந்தார்கள் அங்குள்ள முஸ்லிம் அமைப்பினர். இது அப்பகுதியில் கலவரமாக வெடித்தது.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் இதில் 5 பேர் கொல்லப்பட்டார்கள். 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள். இந்தனை தொடர்ந்து டிசம்பர் 10 வரையிலும் அந்த  மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்று உத்திரபிரதேச சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்தது.

இதில் பாஜக அரசு திட்டமிட்டு ‘ஷாஹி ஜமா’ மசூதி கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வேலையை செய்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

Previous articleபிக்பாஸ் 8-வது சீசன் நிகழ்ச்சி பிரபலம் தூக்குபோட்டு தற்கொலை!!
Next articleசொத்து வாங்க விற்க.. 2 லட்சம் வரை மட்டும் தான் அனுமதி!! வருமான் வரித்துறையின் அதிரடியான ரூல்ஸ்!!