திமுகவின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையான காரணம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி நான் முதல்வர் நாற்காலியில் அமர்கிறேனோ, இல்லையோ, ஆனால் ஸ்டாலினை அமர விடமாட்டேன் அதேபோல என்னுடைய ஆதரவாளர்களும் அவரை முதல்வர் நாற்காலியில் அமர விடாமல் செய்வார்கள் என்று மதுரையில் நடைபெற்ற அவருடைய ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் அழகிரி.

நடிகர் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்தால் அவருடைய கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தவுடன் அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரை சேர்த்து வைத்திருக்கிறார்கள். இவ்வாறு ஸ்டாலினுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு எல்லாம் நெருக்கடி கொடுத்து வருகிறார் அழகிரி.

ஸ்டாலினின் கூட்டணி வியூகங்கள் அனைத்தையும் திறமையாக செயல்பட்டு அதனை தெரிந்து கொண்டு, அதனை உடைக்கும் வேலையில் அழகிரி ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள்.

ஏற்கனவே கூட்டணி கட்சித் தலைவர்களின் அதிருப்தியில் சிக்கித்தவிக்கும் ஸ்டாலினுக்கு இது மேலும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு மதுரையிலே திமுகவை சேர்ந்த பலபேர் அழகிரி எந்த நேரத்தில் முடிவு எடுப்பார் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் ஸ்டாலினுக்கு வந்திருக்கிறது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் ஸ்டாலின்.

ஒருவேளை கூடிய விரைவில் அழகிரி தனிக்கட்சி தொடங்கும் முடிவை அறிவித்தால், மதுரையில் திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என்று தெரிவிக்கிறார்கள். காரணம் அங்கே இருக்கக்கூடிய ஒட்டுமொத்த திமுகவும் அழகிரியின் பக்கம் செல்வதற்கு முனைப்பாக இருப்பதாக தெரிகிறதாம்.

ஏற்கனவே கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமலும், அதோடு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகத்தில் கொடுத்துவரும் நெருக்கடியிலும் சிக்கி தவித்து கொண்டு இருக்கும் ஸ்டாலினுக்கு இந்த தகவல் பேரிடியாக இருப்பதாக சொல்கிறார்கள்.