கடந்த பத்து வருடங்களில் இவையெல்லாம் வேகமாக அழிந்து விட்டது! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கடந்த சில வருடங்களாகவே கடலுக்கு அடியில் இருக்கும் பனிப் பாறைகளும் உருகி, பனிக்கட்டிகள், பனிமலைகள் உருகி வருகின்றன. இது உலகத்தில் வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக நிகழ்கிறது என்று அறிவியலாளர்கள் காரணம் சொல்லி வருகின்றனர். இது உலகத்தை அச்சுறுத்தும் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் தி கிரேட் பேரியர் ரீஃப் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பவளப் பாறை திட்டு கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.
இது தவிர தெற்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல், கிழக்கு ஆசியா, மேற்கு இந்திய பெருங்கடல், வளைகுடா பகுதிகள் உள்ளிட்ட கடற்பகுதிகளில் உள்ள பவளப்பாறைகள் கூட அதிக அளவில் காணப்படுகின்றன. கடந்த ஜூன் மாதம் ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் ஒரு குழு பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக கடலில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்து ஆய்வை மேற்கொண்டது.
இந்த அலைகளால் ஆஸ்திரேலியாவின் அவருக்கு மிகுந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது அழியும் நிலையில் இருந்து காக்க புராதான சின்னமாக பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் ஐ நா வின் யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரையை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் உலகளாவிய பவளப்பாறை கண்காணிப்பு அமைப்பு சார்பில் மூலம் 300 விஞ்ஞானிகள் இணைந்து உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பவளப்பாறைகளின் நிலை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் எழுபத்தி மூன்று நாடுகளில் உள்ள 12 ஆயிரம் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டதாகவும், கடந்த 2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சுமார் 11 ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டர் அளவிலான பவளப்பாறைகள் அழிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் 14 சதவிகிதம் ஆகும்.
இதன் காரணமாக அந்த திட்டு போன்ற பவள பாறையும் வேகமாக அழிவை சந்தித்து வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல் நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும் போது பவளப்பாறைகள் தனது நிறத்தை இழந்து விளங்குகின்றன. இதன் மூலம் அதன் அழிவை தெரிந்து கொள்ள முடியும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பவளப்பாறைகள் அழிந்து வருவதால் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவை முழுவதும் மறைந்து விடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.