இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!

0
132

இன்ஜினியரிங் அரியர் மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் தேர்ச்சி! பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!!

 

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கல்லூரிகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக கல்லூரி இறுதி பருவத்தேர்வு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு முந்தைய தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்,தற்போதைய அழியர் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும்
யூசிஜி அமைப்பானது ஏற்க மறுத்தது.மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
தற்போது வரை இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,பொறியியல் மாணவர்களை தவிர்த்து மற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த,அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தமிழகஅரசின் வழிகாட்டுதல்படி குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்க பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில்,அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆலோசிக்கப்பட்டது.
இதுமட்டுமன்றி தேர்ச்சி வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த தீர்மானத்திற்கு சிண்டிகேட் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்ற பின்னர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்தும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது குறித்தும் அறிவிக்கப்படும் என்றும்,சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ்இயங்கும் கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களின் விவரங்கள் பெரும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை பல்கலைக்கழகம் மட்டுமின்றி மற்ற கலை அறிவியல் பல்கலைக்கழகங்களும் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Previous articleதுளசியுடன் இதை கலந்து குடித்தால் சகல நோய்களும் தீரும்! படிக்க மறந்துவிடாதீர்கள்!
Next articleதனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மாமனிதர்! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்!