செய்த பாவங்களை போக்கும் ஐந்து சேவைகள்!

Photo of author

By Sakthi

மனித உடலானது இறைவனால் பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்பவை பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுகிறது. பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கிவரும் மனிதன் தான் வாழும் காலத்தில் பஞ்ச எந்திரங்களால் மெய், வாய், கண், காது, மூக்கு, உள்ளிட்டவற்றின் மூலமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது உண்டாகும் பாவங்கள் காரணமாக கர்மவினைகள் ஏற்படுகிறது.

எந்த வகையில் பாவம் செய்யப்பட்டதோ அந்த வகையில் தானே அதனை தீர்க்க முடியும். 5 விதமான சேவைகள் மூலமாக பாவங்களை சேர்க்க இயலும் என்று தெரிவிக்கப்படுகிறது.

1-யாதானம்: கோயில் கட்டுதல் நந்தவனம் அமைத்தல், கோவில் திருப்பணிகள் செய்தல்.
2-சிரவணம்:
இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டறிதல்.
3-கீர்த்தனம்:
இறைவனை இசை கருவிகள் மூலமாக பாடி ஆடி மகிழ்விக்க செய்தல்.
4-புஜார்த்தனம்:
அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.
5-ஸ்துதி:
இறைவனைப் புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

இந்த 5 விதமான சேவைகளை செய்து வர கர்ம வினைகளால் உடல், உயிர், உள்ளிட்டவை அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் கிடைக்கும். இந்த வழிபாட்டை ஜென்ம நட்சத்திர நாளில் செய்யும் போது பலன் இரட்டிப்பாகும் என்கிறார்கள்.

குறிப்பாக ஆலய வழிபாட்டிற்கு மிக, மிக, உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்று தெரிவித்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு வழிபடுவதால் தங்களின் தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திர நாளாகும் என தெரிவிக்கப்படுகிறது.