எனது வழியில் குறுக்கிடிகிறார்.. இது நன்றாக இல்லை!! கம்பீருக்கு வார்னிங் கொடுக்கும் ரோஹித் சர்மா!!

Photo of author

By Sakthi

இந்தியா மற்றும் இலங்கை மோதிய ஒருநாள் தொடருக்கு பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் சீனியர் வீரர் கவுதம் கம்பீர் அவர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
டி20 உலகக் கோப்பையுடன் இராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சிக் காலம் முடிந்ததை அடுத்து கவுதம் கம்பீர் அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தலையை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இவர் பதவியேற்றவுடனே இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்று இரண்டு தொடர்களில் இந்திய அணி பங்கேற்றது. இதில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து  இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
அதாவது இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மாற்றியது இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. அதாவது கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முழுநேர பேட்ஸ்மேன்கள் இருக்க பவுலிங் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலை நடுவரிசையில் இறக்கிவிட்டார் கவுதம் கம்பீர். இதனால் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களுடைய உத்வேகம் குறைந்துள்ளது.
அது மட்டுமில்லாமல் கடைசி ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ் என்ற ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரை மட்டுமே வைத்து இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் முக்கியமான ஒருநாள் போட்டியை எதிர்கொண்டது கம்பீர் அவர்களின் முடிவுதான்.
கம்பீர் அவர்களின் இந்த முடிவுகள் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ரோஹித் சர்மா இதையெல்லாம் சரி செய்து இருக்கலாம் என்று கேட்டால் கவுதம் கம்பீர் சீனியர் வீரராகவும் அது மட்டுமில்லாமல் தலைமை பயிற்சியாளராக இருப்பதால் அவருடைய பேச்சை தட்ட முடியாமல் ஒன்றும் பேசமுடியாமல் ரோஹித் சர்மா இருக்கிறார்.
சுதந்திரமாக செயல்பட்டு அணியை வழிநடத்தி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரையிலும் டி20 உலகக் கோப்பை தொடரை வென்று கொடுத்து அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்து செல்லும் கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் முடிவுகளில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலையிடுகிறார். மேலும் இந்திய அணி முழுவதும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை காட்ட வேண்டும் என்று கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார்.
இது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்களை கோபமடையச் செய்துள்ளதாகவும் இதனால் கம்பீர் மேல் ரோஹித் சர்மா புகார் கொடுக்க இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் கவுதம் கம்பீர் எவ்வாறு பதில் அளிப்பார் என்று பார்க்கலாம்.