ரேஷன் கார்டு இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் ரூ.1000 கிடையாது!! அமைச்சர் விளக்கம்!!

0
147
All these people don't have Rs.1000 even if they have ration card!! Minister Explanation!!
All these people don't have Rs.1000 even if they have ration card!! Minister Explanation!!

மகளிர் உரிமை தொகை ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் என்ற தகவல் வந்த நிலையில், இவர்களுக்கெல்லாம் கிடையாது என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ள காரணமாக பல நடவடிக்கைகள் மக்களை ஆச்சிரியமாக்கும் வகையில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து  ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 என்ற தகவல் வெளியான நிலையில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க அனைவரின் விண்ணப்பங்களையும் பரிசீலித்து தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். அந்த விண்ணப்பத்திற்கு தகுதி இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை கிடையாது என கூறியுள்ளார். மேலும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொது துறை நிறுவனங்கள், ஓய்வூதியர்கள், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்,சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் என இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடையாது என அரசு அறிவித்து இருந்தது.

இப்போது மீண்டும் கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவுபடுத்த காரணம் உள்ளாட்சி தேர்தல் முன்பு திமுக அரசு மற்ற கட்சிகளை விட முன்கூட்டியே தனது வேலைகளை தொடங்கிவிட்டது என பலராலும் கூறப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க சரியான ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், இல்லையென்றால் நிராகரிக்கப்படும். எனவே சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க  வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் புதிதாக ரேஷன் கார்டு பெறுபவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Previous articleஒரே நொடியில் கோடீஸ்வரன் ஆன அதிசய நபர்!! கூரை வழியாக வந்த பணமழை!!
Next articleநெஞ்சு சளிக்கு மருந்து வேண்டாம்!! இந்த கஞ்சி செய்து குடிங்க.. 5 நிமிடத்தில் பலன் உண்டு!!