நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி!

0
195
All this would have happened if I had! So I just left! - Ashraf Kani!
All this would have happened if I had! So I just left! - Ashraf Kani!

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியத்தை தொடர்ந்து அங்கு தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கன் நாட்டு அரசுக்கும் இடையே தீவிரமான போர் நிலவி வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் அரசை தலிபான்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பி ஓடினார்.

இப்படி இருந்த நிலையில், அவர் மீது பல்வேறு குற்ற சாட்டுகள் எழுந்து வந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மனிதாபிமான அடிப்படையில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக, பணத்தை கடத்திச் சென்றதாகவும் ஒரு தகவல் வெளியானது.

அதேபோல் விமானப்படை தளத்துக்கு நான்கு கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றார் என்றும், தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் அவர் கார்களில் கொண்டு வந்த பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர். ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகள் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த ஓடுதளத்திலேயே வீசிவிட்டு தப்பி ஓடியதாகவும் ரஷ்யா செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தகவல் தெரிவித்தது.

ஆனால் அவர் வெளியிட்ட வீடியோவில், அந்த மவுனத்தை கலைத்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் சென்ற பின் முதல் முறையாக அவர் வீடியோ மூலம் தன்னைப் பற்றிய செய்தியையும், உண்மையையும் உலகிற்கு வெளிக்காட்டியுள்ளார். துபாயிலிருந்து பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில், அவர் பேரழிவுகளை தவிர்ப்பதற்காக மட்டுமே ஐக்கிய அரபு எமிரேட்சில் இருப்பதாகவும், தற்போது நாடு திரும்ப பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் அவர் தான் காபூலில் தங்கியிருந்தால், பெரிய வன்முறையை சந்திக்க நேர்ந்திருக்கும் என்றும், தலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு மிக்க நன்றி என்றும் தெரிவித்தார். தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை. இது எங்களின் தோல்வி என்றும் அவர் கூறினார்.

மேலும் தலிபான்களுக்கு அதிகாரத்தை அமைதியாக மாற்ற விரும்பினேன். ஆனால் எனது விருப்பத்திற்கு மாறாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என்றும் கூறினார். மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட பழியை இல்லையென மறுத்துள்ளார். பணத்துடன் சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். நான் பணம் கொண்டு வந்ததாகக் கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தியே ஆகும் என்றும் கூறினார். நாட்டின் தலைவராக எனக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும் கூறினார்.

Previous articleதனுஷ் திரைப்படம் தாமதம்! காரணம் என்ன தெரியுமா?
Next articleமக்களே போலி அதிகம் என எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!