TVK AMMK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் 1 வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினர். ஒரு வருடத்திலேயே இவருக்கு யாரும் எதிர்பார்க்க முடியாத அளவு ஆதரவு கிடைத்தது. முக்கியமாக இளைஞர்களின் ஆதரவு தினம் தினம் பெருகி கொண்டே இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறி வருகிறார்.
இந்நிலையில் இவர் மீது வருமான வரியை மறைத்ததற்காக வழக்கு தொடரப்பட்டது. இது இன்னும் நிலுவையில் உள்ளது. தனது முதல் மாநாட்டிலே கூட்டணி அமைக்க தயார் என்று விஜய் அறிவித்திருந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்த பலரும் குறிப்பாக டிடிவி தினகரன் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்டது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். ஆனால் அமமுகவின் முடிவு டிசம்பரில் தான் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் அதிமுக பிரச்சனை தொடர்பாக பல்வேறு நபர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் டிடிவி தினகரன்- விஜய் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று செய்தி பரவிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன் அமமுக தலைமையில் எந்த கட்சியும் கூட்டணி அமைக்காது.
ஆனால் நிச்சயம் அமமுக வலிமை வாய்ந்த கட்சியில் தான் கூட்டணி அமைக்கும் என்றும், அந்த கூட்டணி தான் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர் விஜய்யுடனான கூட்டணி உறுதி செய்யபட்டு விட்டது என்பது வெறும் வதந்தி என்றும், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்பதை அமமுக டிசம்பரில் அறிவிக்கும் என்றும் கூறினார்.