PTK TVK: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வரும் வேளையில், யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கது கூட்டணிகளை மாநாடுகளிலோ அல்லது பிரச்சாரத்திலோ அறிவிப்போம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை முன்னணி கட்சிகளான அதிமுகவின் கூட்டணியும், திமுக கூட்டணியும் தவிர வேறு எந்த கட்சியின் கூட்டணியும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தேர்தல் நேரத்தில் சமூக வாக்குகளை வாங்குவதற்காக விமான நிலையத்திற்கு தலைவர்கள் பெயரை சூட்டுவேன் என இபிஎஸ் அறிவித்திருப்பதால் மற்ற சமுதாயத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், முடிந்த பிரச்சனையை மீண்டும் தூண்டி விடுகிறார் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும் பேசிய அவர், கூட்டணி குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடக்கும் புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் எந்த கட்சியுடன் இணையப்போகிறார் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதுள்ள அனைத்து கட்சிகளும் பெரும்பாலாக தவெகவுடன் இணைந்து வருவதால் இவரும் அக்கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.