
BJP TVK: செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெகவின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் பேசப்பட்டது. ஒரு பரப்புரையில் இவ்வளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த்து இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவம் தொடர்பாக யார் மீது தவறு உள்ளது என்பதை விசாரிக்க ஆளுங்கட்சி தனி நபர் ஆணையத்தை அமைத்தது.
இதனை ஏற்காத பாஜக 8பேர்க் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கே நேரில் சென்று விசாரணை நடத்தியது. இது விஜய்யை கூட்டணியில் சேர்க்க தான் என்று பலர் கூறினாலும், இந்த விசாரணை குழு மூலம் விஜய்க்கு பாதகம் தான் நிறைய உள்ளது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது அவர் விஜயிக்கு அநீதி இளைக்கபட்டிருக்கிறது. மெரினா கடற்கரையில் வானூர்தி சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பேற்பது.
எல்லாவற்றிக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் கரூர் துயரத்திற்கு மட்டும் விஜய் மீது பழி போடுவது நியமல்ல என்று கூறினார். விஜக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றால், நாங்களும் பாதிக்கபட்டிருக்கிறோம் என்று கூறிய அவர் விஜயுடன் கூட்டணி அமைக்கலாம், இல்லையென்றால் அது எப்படி வேண்டுமானாலும் மாறலாம், அது வருங்காலத்தில் தான் தெரியுமென்று பொடி வைத்து பேசினார். தமிழிசையின் இந்த கருத்து தற்போது அரசியல் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே ஒரு முறை விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதை விட திமுக அரசை எதிரிப்பதே எங்களின் நோக்கம் என்று கூறியியிருந்தார். என்னதான் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக பாஜக வெளியே காட்டி கொண்டாலும், மறைமுகமாக விஜய்யை வீழ்த்த திட்டம் திட்டு வருகிறது. தமிழிசையின் இந்த பேச்சும் விஜய்யை அழிக்கும் வரை அவருக்கான ஆதரவு தொடரும் என்பதை குறிப்பது போல உள்ளதாக பேசப்படுகிறது.