ADMK: அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே நன்கு அறியப்பட்டவர். அப்போதிருந்த ஆட்சியில் அவருக்கு நல்ல முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அது தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார் இபிஎஸ்.
இதனை தொடர்ந்து பலரும் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இவரை தொடர்ந்து இபிஎஸ்யும் டெல்லி சென்றார். அவர் அமித்ஷாவிடம் பேசிய போது ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்கு சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்கு எந்த விதமான கருத்தையும் கூறாமல் இருந்தார் செங்கோட்டையன்.
இதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று செங்கோட்டையனை நேரில் சந்தித்துள்ளனர். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது வெறும் சந்திப்பு மட்டுமல்ல. அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விரைவில் செங்கோட்டையன், ஓபிஎஸ் சந்திப்பு நடைபெற உள்ளதாகவும், அடுத்த கட்டமாக டிடிவி தினகரனும், சசிகலாவும் ஆலோசனையில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு நடைபெறுவது உறுதியானால் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒரு அணியாக செயல்படும் வாய்ப்பு உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அடுத்த அரசியல் கூட்டணி உருவாகும் சத்தியம் அதிகரித்துள்ளது. இது இபிஎஸ்க்கு எதிரான ஒரு வலுவான அணியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கருதுகின்றனர். ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா, ஆகியோரின் ஒருங்கிணைப்பு அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.