பிரேமலதா வைத்த முக்கிய நிபந்தனை! தீவிர ஆலோசனையில் முதல்வர்!

Photo of author

By Sakthi

அதிமுக கூட்டணியில் தொடர வேண்டுமென்றால் முதல்வருக்கு பிரேமலதா இரு நிபந்தனைகளை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்த பின்னர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சி தனியாக போட்டியிட்டது விருதாச்சலத்தில் தொகுதியில் விஜயகாந்த் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி அவர்களை தோற்கடித்து வெற்றி பெற்றார் அந்த தேர்தலில் தேமுதிக 8.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10.3 சதவீத வாக்குகளை பெற்ற தேமுதிக 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது அதில் 29 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்தார் விஜயகாந்த்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு 5.1 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது தேமுதிக 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு தலைமையேற்று 104 தொகுதிகளில் போட்டியிட அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது தேமுதிகவின் வாக்கு சதவிகிதமும் 2.4 ஆக குறைந்தது.

தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட பிறகான முதல் தேர்தலில் 8.4 சதவீதம் வாக்குகளை பெற்று பலமான கட்சியாக உருவான தேமுதிமுக 14 வருடங்களில் தன்னுடைய செல்வாக்கை மெல்ல மெல்ல இழந்து கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி விருதுநகர் திருச்சி வட சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது அதனுடைய வாக்கு சதவீதமும் 2.19 ஆக குறைந்து விட்டது.

சமீப காலங்களில் ஊடகங்களை சந்திக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இப்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்று தெரிவித்து வருகின்றார் அதோடு சட்டசபைத் தேர்தலில் கூட்டணி சம்பந்தமாக ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும் என பட்டும் படாமல் தெரிவித்து வருகின்றார் இதற்கிடையே கூட்டணிக்கான நிபந்தனையை இப்போது இருந்தே தெரிவிக்க ஆரம்பித்து விட்ட்து என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ்க்கு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர் பிரேமலதா விஜயகாந்த் அதேபோல் கடந்த தேர்தலில் விருதாச்சலம் ரிசிவந்தியம் உளுந்தூர்பேட்டை போன்ற வெளி மாவட்டங்களில் தான் விஜயகாந்த் போட்டியிட்டார் இப்போது அவருடைய உடல்நிலை வெளி மாவட்டங்களில் போட்டியிடும் அளவிற்கு இல்லை என்று தெரிவிக்கிறார்கள் அதன் காரணமாக விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் மற்ற தலைவர்களுடன் ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்து இருக்கின்றார் என்றும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.