
BJP TVK: தமிழக அரசியல் களம் விஜய்யின் வருகையால் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. விஜய் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை அவருக்கான ஆதரவும், ஆரவாரமும் அதிகரித்துள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தவெகவின் அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் கூறியிருந்தார். ஆனால் பாஜக விஜய்யை எதிரியாக நினைக்கவில்லை என்பது கரூர் சம்பவத்தில் தெளிவாக தென்பட்டது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக தவெக மீதும், தவெக மீதும் குறை கூறி வந்தது.
இதனால் இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழுவும் அமைக்கப்பட்டது. இதன் மேல் நம்பிக்கை இல்லாத பாஜக விஜய்க்கு உதவுவதாக கூறி, பாஜக எம்.எல்.ஏ. ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. இதனால் பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சிக்கிறது என்பது தெளிவானது.
தொடர்ந்து விஜய்க்கு பாஜகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, யாரும் விஜய்யிடம் கூட்டணி குறித்து வற்புறுத்தவில்லை. அவர்கள் விரும்பினால் பாஜக கூட்டணியில் சேரலாம் என்பது போன்ற தொனியில் பதிலளித்து வந்தனர். இந்நிலையில் பாஜக- தவெக கூட்டணி குறித்து பல்வேறு விவாதங்களும், வதந்திகளும் பரவி வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா இது குறித்து பேசியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழகத்தில் விரிவுப்படுத்த விரும்புகிறோம், மேலும் தவெக உடனான கூட்டணி குறித்து எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த பதிலில், விஜய்யுடன் பேசி முடிவெடுக்கபடும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஆகையால் விஜய் பாஜக கூட்டணியில் இணைவது பாஜக கையில் தான் உள்ளது என்பதை அமித்ஷா தீர்க்கமாக கூறியுள்ளார். மேலும் நாங்கள் கூட்டணிக்கு அழைத்தால் விஜய் கூட்டணியில் இணைந்து தான் ஆக வேண்டும், அவருக்கு வேறு வழியே இல்லை என்பதையும் அமித்ஷா தெளிவுப்படுத்தியுள்ளார்.
