விஜய்யை மையமாக வைத்து காய் நகர்த்தும் கூட்டணிகள்.. லாபமடையும் அதிமுக!!

0
188
Alliances that move pieces with Vijay at the center.. Vijay who shouted DMK in one year! Profitable AIADMK..
Alliances that move pieces with Vijay at the center.. Vijay who shouted DMK in one year! Profitable AIADMK..

DMK TVK ADMK: கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே விஜய்யுடன் யார் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூட்டணி குறித்து ஜனவரியில் தான் முடிவு எடுக்கவேண்டும் என்று விஜய் உறுதியாக உள்ளார். இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் தனக்கான ஆட்சி பங்கையும், அதிக தொகுதிகளை ஒதுக்காவிட்டால் தவெகவுடன் கூட்டணி அமைத்து கொள்வோம் என்று கூறி வருகின்றனர்.

இது சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென தீவிரமாக உழைத்து வரும் திமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொடர்ந்து திமுகவை எதிர்த்து வருவதால், கூட்டணி கட்சிகளின் வாக்கும், திமுக மீது அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களின் வாக்கும் தவெகவிற்கு செல்லும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனால் மற்றொரு புறம் திமுகவிற்கு மாற்று அதிமுக தான் என நினைக்கும் தொண்டர்களின் வாக்கு அதிமுகவிற்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் பிரச்சாரமும், திமுக கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளும் ஒரு வகையில் அதிமுகவிற்கு சாதகமாக மாற வாய்ப்பிருக்கிறது.

Previous articleTVK திடீர் முடிவு.. கூட்டணி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!
Next articleடிடிவி தினகரனுக்கு எதிராக திட்டம் தீட்டும் இபிஎஸ் நயினார்.. ஓபிஎஸ்யின் பதிலை எதிர்நோக்கும் அரசியல் களம்!!