நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2!! இந்த ஆண்டு வெளியாகிறது?

நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2!! இந்த ஆண்டு வெளியாகிறது?
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகமான புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சென்ற வருடம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் மட்டுமில்லாமல் திரைப்படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
புஷ்பா 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி புஷ்பா 2 திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகின்றது.