தி.மு.க வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! மு .க .ஸ்டாலின் விடுத்த கோரிக்கை
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (24.1.2025) தி.மு.கவில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது தி.மு.கவில் 3000 பேர் மாற்றுக் கட்சியில் இருந்து இக்கட்சியில் வந்து இணைந்துள்ளனர். அவற்றுள் 51 பேர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள்.
அந்த வகையில் தங்களது கட்சியில் ஆயிரக்கணக்கானோர் வந்து இணைந்த நெகிழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தனது உரையில் பல்வேறு செய்திகள் குறித்தும் மற்ற கட்சிகள் குறித்தும் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது தி.மு.க கட்சி ஆனது 1949 ஆம் ஆண்டு அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கட்சியானது 1949 இல் உருவாக்கப்பட்டாலும் தேர்தலில் 1957 ஆம் ஆண்டு தான் ஈடுபட முடிந்தது. அன்று முதல் இன்று வரை 6 முறை வெற்றி பெற்று உள்ளோம். மேலும் இக்கட்சியானது அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமருவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் எனவும், நாட்டு மக்களுக்காக உழைத்திட வேண்டும் எனவும் உருவாக்கப்பட்டதே தி.மு.க கட்சி என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது தற்போது பல கட்சிகள் உருவாகி வருகின்றன அக்கட்சிகள் “நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்றும், அடுத்த ஆட்சி எங்களுடையது தான் என்றும்” கூறி வருகின்றனர் என்று கட்சியின் பெயரை குறிப்பிடாமல் தனது உரையில் சிறிது ஆவேசத்தை காட்டினார் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள்.
மேலும் தனது கட்சியின் முன்னேற்றத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களும் முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். அவர் அவ்வாறு கூறியதற்கு காரணம் என்னவென்றால் ஆளுநர் தி.மு.கவிற்கு எதிராக பேசுவதாகவும், மதத்தை மையமாகக் கொண்டு பேசுவதாகவும் தெரிய வருகிறது. மேலும் ஆளுநர் கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் உரையை ஆற்றுவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இதேபோன்று அடுத்த முறையும் ஆளுநர் சட்டசபைக்கு வந்து ஆளுநர் உரையை ஆற்றாமல் செல்ல வேண்டும் எனவும் அதனை மக்கள் காண வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஆளுநர் இவ்வாறு பேசுவதால் தான் தி.மு.க கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் எனவே ஆளுநரை மாற்ற வேண்டாம் எனவும் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.