பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி!

0
148

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி ஆகி விட்டது. இந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் காலை 11 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் அடிப்படையில் மொத்தம் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 89 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், சிரோமணி அகாலிதளம் கட்சி 9 தொகுதிகளிலும் பாஜக 5 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியிருக்கிறது ஏற்கனவே தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் முதல்முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது.

அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் துரி தொகுதியில் முன்னிலையிலிருக்கிறார் இதனை தொடர்ந்து அவருடைய வீட்டின் அருகே ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Previous articleசனி கிழமை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையில் பள்ளிகள் திறப்பு! கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
Next articleசூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட காட்சிகள் திடீர் ரத்து! இனி ஓடிடி தளத்தை நோக்கி தான் செல்ல வேண்டும்!