சிவகார்த்திகேயனின் அமரன் பட வில்லன் யார்? படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

Photo of author

By Janani

சிவகார்த்திகேயனின் அமரன் பட வில்லன் யார்? படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் அமரன் படத்தின் வில்லன் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்து வெளிவந்த அயலான் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்த வருகிறார். இப்படமானது மேஜர் முகுந் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த படத்தை சோனி பிக்ச்சர் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷ் நியமனம் இடம்பிடித்து உள்ளார். மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தற்போது அமரன் படமானது எஸ்.கே 23 என்ற ஒர்க்கிங் டைட்டிலின் கீழ் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் ருக்மணி, வசந்த், பிஜூ மேனன் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் படக்குழு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜமால் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏ.ஆர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய தர்பார் பட தோல்வியை தொடர்ந்து இந்த படம் முருகதாஸுக்கு ஒரு கம் பேக் ஆக இருக்கும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.