TVK AMMK: 2025 தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதத்தை வலுப்படுத்த அரசியல் கூட்டணிகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், கட்சியின் வெற்றியை அதிகரிக்க டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் இணைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மதுரையில் டிடிவி தினகரன், 2026 தேர்தலுக்காக எதிர்பாராத கூட்டணி உருவாகும் என தெரிவித்திருந்தார்.
இதேபோல், ஓபிஎஸ் அணியினரும் பெரிய மாற்றத்துக்கான அரசியல் ஒருமைப்பாடு தேவை என கூறியுள்ளனர். இருவருக்கும் தென் மாவட்டங்களில் வலுவான ஆதரவு இருப்பதால், தவெக கட்சியின் வளர்ச்சிக்காக இந்த கூட்டணி முக்கியமானது என கட்சி உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், தவெக தலைவரான விஜய், கட்சியின் தனித்த நிலைப்பாட்டை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறார்.
ஆனால், தென் மாவட்டத்தில் திமுகவின் வாக்கு வங்கியை வலுவை எதிர்கொள்ள தவெக, தினகரன், ஓபிஎஸ் கூட்டணி அமைக்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது. திராவிட கட்சிகளை எதிர்த்து வெற்றி காண வேண்டுமெனில் ஒருங்கிணைந்த கூட்டணி தேவை. தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள் இது குறித்து தற்போது விஜய்யிடம் ஆலோசனை நடத்தி தென் மாவட்டங்களில் வாக்கு வங்கியை வலுப்படுத்த ஒருங்கிணைந்த கூட்டணி தேவை என வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் அரசியல் களம் மேலும் சுவாரஸ்யமாக மாறும் என அரசியல் ஆர்வலர்கள் மதிப்பிடுகின்றன.

