மாதந்தோறும் லட்ச ரூபாய் வருமானம் வரும் அசத்தல் திட்டம்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

Photo of author

By Sakthi

மாதந்தோறும் லட்ச ரூபாய் வருமானம் வரும் அசத்தல் திட்டம்.. உடனே அப்ளை பண்ணுங்க!!

நமது இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதில் மாதாந்திர சேமிப்பு திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.தங்கள் முதலீட்டு தொகைக்கேறப் ஒவ்வொரு மாதமும் இந்த MIS திட்டத்தின் மூலம் வட்டி பெற முடியும்.இந்த திடத்திக்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.1,000 மற்றும் அதிகப்பட்ச முதலீட்டு தொகை ரூ.9,00,000 ஆகும்.கூட்டாக சேர்ந்து கணக்கு தொடங்கினால் அதற்கான உச்ச வரம்பு ரூ.15,00,000 ஆகும்.

5 ஆண்டுகால திட்டமான MIS-இல் கணக்கு தொடங்கிய நாளிலிருந்து முதிர்வு காலம் வரை மாதாந்திர வட்டி வழங்கப்படும்.கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 3 வருடங்களுக்குள் அதை மூட நேரிட்டால் 2% வரை பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.

மாதாந்திர வருமான திட்டத்திற்கான தகுதி

1)இந்திய குடிமனாக இருத்தல் வேண்டும்.

2)10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கணக்கு தொடங்கலாம்.

3)10 வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியுடன் கணக்கு தொடங்கலாம்.

4)அதிகபட்சம் 3 பேர் இணைந்து கூட்டு கணக்கு தொடங்கலாம்.

மாதாந்திர வருமான திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள்:

*விண்ணப்பபடிவம்
*ஆதார் அட்டை
*வாக்காளர் அட்டை
*பான்’கார்டு
*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

தங்கள் இடத்திற்கு அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸுக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்து மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.