அமேசான், கூகுளினால் இவை எல்லாம் செய்வது நாட்டிற்கு அச்சுறுத்தல் – ரிசர்வ் வங்கி!
நிதி கொள்கையின் காரணமாக நிலைத்தன்மை குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
சில்லறை வணிகத்தின் மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும் . தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.
மிகப் பெரிய அளவில் பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், தகவல்களை பாதுகாப்பது, இணைய குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது போன்றவற்றில், இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் சவாலை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்த நிறுவனங்களின் திட்டங்கள், நிதி சார்ந்த விதிகளை வகுப்போருக்கு சவால் அளிக்கிறது.
நமது நாட்டில் அமேசான், கூகுள் ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன. பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சில்லறை வணிகத்திற்கான பண பரிமாற்ற சேவையை வழங்குவதற்கான அனுமதியைப் பெற விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி இந்த கருத்தை தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆகவே மக்களே எதற்கென்றாலும், நாம் நேரடி பண பரிவர்த்தனை செய்யும் போது நமது உடலுக்கும் நலம் பயக்கும். மற்றவர்களால் நமது தகவல்களும் திருடப் படாமலும், பத்திரமாகவும் இருக்கும். தற்போதெல்லாம் திருடர்கள் எங்கு இருந்து வருகிறார்கள் என்பதை அறியவே நமக்கு மிகுந்த கால அவகாசம் ஏற்படுகிறது. இப்போது உள்ள மக்கள் அனைவரும் பிறரை ஏமாற்றுவதில், ஞானியாக உள்ளார்கள். எனவே நம் பொருளை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொறுப்பாக இருங்கள். எல்லா பொருளுக்குமே நல்ல விஷயம் ஒன்று இருந்தால், கெட்ட விசயமும் ஒன்று இருக்கும்.