அமேசானில் 500 இந்தியர்கள் பணிநீக்கம்! சோகத்தில் மூழ்கிய பணியாளர்கள்!!

Photo of author

By Sakthi

அமேசானில் 500 இந்தியர்கள் பணிநீக்கம்! சோகத்தில் மூழ்கிய பணியாளர்கள்!!

Sakthi

Updated on:

அமேசானில் 500 இந்தியர்கள் பணிநீக்கம்! சோகத்தில் மூழ்கிய பணியாளர்கள்!
உலகில் உள்ள மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 பணியாளர்களை நீக்கியுள்ளது. இதனால் பணியாளர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
உலகில் கடந்த சில மாதங்களாக பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகின்றனர். மைக்ரோ சாப்ட், கூகுள், டெல், ஐ.பி.எம் போன்ற பல பெரிய நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. இந்த நிலையில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த தகவலை அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசாஸ் அறிவித்துள்ளார். தொழில்நுட்ப பங்குகளின் சரிவால் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதை காரணமாக வைத்து இந்த பணிநீக்கம் நடந்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக அமேசான் நிறுவனம் 27,000 பேரை  பணிநீக்கம் செய்துள்ளது.