அமெரிக்க மக்களே ஜாக்கிரதை! எச்சரிக்கை விடுத்த அரசு!

0
154

அல்கைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்ஜவாஹிரி அமெரிக்க படைகளால் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற காரணத்தால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டு மக்களை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் தீவிரவாதியான அல்ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் ஆளில்லா விமான குண்டு வீச்சு தாக்குதலில் அமெரிக்க படையால் கொல்லப்பட்டார். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ நடத்திய இந்த தாக்குதல் அல்கெய்தா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது அல்ஜவாஹிரி கொல்லப்பட்டதால் அல்கெய்தா அமைப்பு வெளிநாடுகளிலிருக்கின்ற அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல், குண்டு வீச்சு, ஆல்கடத்தல், போன்ற தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதால் வெளிநாடுகளிலிருக்கின்ற அமெரிக்காவைச் சார்ந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகங்களில் பதிவு செய்து செல்போனில் பயங்கரவாத அச்சுறுத்தல் பாதுகாப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். உள்நாட்டு செய்திகளை உன்னிப்பாக கவனித்து அங்கு இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகங்களுடன் தொடர்பிலிருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அயல் நாட்டிற்கு செல்லும் அமெரிக்காவைச் சார்ந்தவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அமெரிக்கர்கள் உள்நாட்டு போர் நடைபெறும் நாடுகளுக்கு செல்ல வேண்டாம். அங்கு இருக்கக்கூடிய பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅம்மா குடிநீருக்கு பதிலாக ஆவின் குடிநீர்! பால்வளத் துறை எடுத்த அதிரடி முடிவு!
Next articleஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை! அவகாசம் கேட்ட ஆணையம் அறிவுறுத்திய தமிழக அரசு!