AMMK BJP: சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சுழன்று கொண்டிருக்கும் சமயத்தில், பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்ததாக தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. அதற்காக அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு அதிமுகவே அதன் தோல்விக்கு காரணமாகி விடுமோ என்ற பயம் உள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவு, உட்கட்சி பிரச்சனை போன்றவை பாஜகவின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே பாஜகவின் இந்துத்துவவாதத்தை தமிழக மக்கள் ஏற்காததால், அதனால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை.
இந்நிலையில் தான் அதிமுகவின் பிரிவினையை சரி செய்து திமுகவிற்கு எதிர்க்கட்சியாக வரவேண்டுமென பாஜக திட்டம் தீட்டியது. ஆனால் தனது தலைமை பதவியின் மேலுள்ள பயத்தினால் இபிஎஸ் ஒருங்கிணைப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இந்நிலையில் அதிமுகவின் வருகையால் பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகியது பாஜகவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இவரை மீண்டும் கட்சியில் சேர்க்க எவ்வளவு முயற்சித்தும், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஓபிஎஸ் டெல்லி சென்ற போது கூட, அமித்ஷாவே என்னை அழைத்தாலும் நான் டெல்லி செல்ல மாட்டேன்.
அவரும் என்னை அழைக்க மாட்டார் என்று தினகரன் கூறினார். இதனால் பாஜகவிற்கு, தினகரனுக்கும் இடையில் சச்சரவு நிலவி வந்தது வெளிச்சமானது. இவ்வாறான நிலையில் தான், ஜனவரி 9 ஆம் தேதி அமித்ஷா தமிழக வருகை தர உள்ளார். ஆனால் இதற்கு முன்பே தினகரன் ஜனவரி 5 ஆம் தேதி அமமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று யூகிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அமித்ஷா தமிழகம் வரும் போது, அதிமுக-பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று கூறப்பட்ட காரணத்தினால், டிடிவி தினகரன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.