மக்களைப் பற்றி சிந்திக்காமல் தானும் குடும்பமும் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற கனவுலகத்தில் இருக்கிறார் முதலமைச்சர்! சி.வி சண்முகம் அதிரடி!
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகம் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வரையில் வாய் திறக்கவே இல்லை. முதலமைச்சரின் மௌனம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
தமிழகத்தில் பால் விலை ஒரே நாளில் 12 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது இதன் காரணமாக 40% அளவிற்கு பால் விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது மக்களைப் பற்றி சிந்திக்காமல் தானும், தன்னுடைய குடும்பமும் வாழ வேண்டும் என்று மும்பை முதலமைச்சர் கனவு உலகத்தில் வாழ்ந்து வருகிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் c.v.சண்முகம்.
தமிழக அரசு செயல்படாமல் இருப்பதை ஆளுநர் சுட்டிக் காட்டினால் உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று அவருக்கு மிரட்டல் விடும் பணிகளை செய்து வருகிறார்கள். இதன் மூலமாக திமுக அரசு தன்னுடைய கையாலாகாத தனத்தை வெளிப்படையாக காட்டி வருகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அதோடு அமித்ஷாவின் மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியை வழங்கிய போது அதற்கு திமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பொன்முடியின் மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்திருக்கிறார்கள் அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினால் அதற்கு அவர்களால் பதில் வழங்க முடியாது என்றும் சீவி சண்முகம் தெரிவித்துள்ளார்.