திடீரென்று பேச்சை நிறுத்திய அமித்ஷா! வரவேற்பு வழங்கிய மக்கள் காஷ்மீரில் நெகிழ்ச்சி!

Photo of author

By Sakthi

பாஜக என்றாலே எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று ஒரு பார்வை தமிழகத்தில் இருந்து வருகிறது.

ஆனால் சிறுபான்மையினர் செய்யும் சில முறையற்ற செயல்களை தான் அந்த கட்சி இருப்பதாக பாஜக அபிமானிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் முழுமையாக சிறுபான்மையினரை பாஜக ஒடுக்க முயற்சிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை பிரதமர் நரேந்திர மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெறும் சத்தம் கேட்டது.

அதனைக் கேட்டவுடன் மிகவும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று தன்னுடைய பேச்சை நிறுத்தி அனைவரும் அமைதியாக இருங்கள் என்று சைகையின் மூலமாக தெரிவித்தார்.

அதன் பின்னர் தொழுகை முடிவுற்றவுடன் தன்னுடைய பேச்சை தொடர்ந்தார். இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது காஷ்மீரில் நடைபெற்றுள்ளது.

ஆனால் இந்த முறை அந்த செயலை செய்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. காஷ்மீர் மாநகரத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது மசூதியில் தொழுகை நடக்க அது முடியும் வரையில் அவர் தன்னுடைய பேச்சை நிறுத்தியது அவருக்கு பாராட்டை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 3 வருடங்கள் நிறைவு பெற்று விட்ட நிலையில், இந்த யூனியன் பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வடக்கு காஷ்மீரின் பாரமில்ல மாவட்டத்தில் இருக்கின்ற சவுகத் அலி மைதானத்தில் அமித் ஷா பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருக்கின்ற மசூதியில் தொழுகை அழைப்புக்கான சத்தம் கேட்டது. உடனடியாக தன்னுடைய பேச்சை நிறுத்திய அவர், இது என்ன சத்தம்? என்று கேட்டார். மேடையில் இருந்தவர் மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அவர் அப்படி சொன்னவுடன் அமித்ஷா தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டார். தொழுகை அழைப்பு முடியும் வரையில் அவர் மேடையில் அமைதியாக நின்று கொண்டு இருந்தார்.

அமித்ஷாவின் இந்த செயலுக்கு அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆதரவு வழங்கினர். தொழுகை அழைப்பு முடிவடைந்த உடன் இப்பொழுது நான் பேசலாமா? என்று கூட்டத்தை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார். பேசலாம் என பதில் வந்தவுடன் அவர் பேச்சை தொடர்ந்து ஆரம்பித்தார்.