ADMK BJP: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாநில கட்சிகளை விட தேசிய கட்சிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, உட்கட்சி பிரச்சனை பாஜகவிற்கு அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த டெல்லி தலைமை அதனை சீரமைக்க முயன்று வருகிறது. இதற்காக முதலில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என நினைக்கும் பாஜக, அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்டவர்களை டெல்லி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. செங்கோட்டையன் நீக்கப்பட்ட போதே அதிமுக ஒருங்கிணைப்பில் பாஜக தலையிட கூடாது என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறியதாக தகவல் கசிந்தது.
பாஜகவும் அதிமுக உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறியது. இவ்வாறான நிலையில், ஒருங்கிணைப்பில் பாஜக தலையீடு அதிரித்துள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இபிஎஸ்யால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிசம்பர் 15 குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறிய நிலையில், டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பின் தனது கெடுவை மாற்றினார். இதனால் இபிஎஸ் அமித்ஷா மீது அதிருப்தியில் இருந்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறின.
இந்த இக்கட்டான சூழலில் தான், அதிமுக-பாஜக இடையே மேலும் பிரிவை ஏற்படும் விதமாக பாஜக மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு கருத்தை கூறியுள்ளார். அதிமுக இணைவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பை டெல்லி மேலிடம் பார்த்து கொள்ளும் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த கூற்று, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு அதிகரித்துள்ளது என்பதையும், அதிமுகவில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் பாஜக முதல் ஆளாக குரல் கொடுக்கும் என்பதையும் நிரூபித்துள்ளது. உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாமென இபிஎஸ் எவ்வளவு கூறியும், அமித்ஷா கேட்காதது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.