கமல் நடிக்க தடையாக நின்றவர் இவரே!! பகிரங்கமாக குற்றம் சாட்டிய காந்தராஜ்!!

Photo of author

By Sakthi

Kamal Haasan: ஹிந்தி படத்தில்  கமல் நடிக்க தடையாக இருந்து அமிதாப்பச்சன் தான் என  காந்தராஜ் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமல்லாமல் திரைக்கதை மற்றும் வசனம் ,பாடல் என பான் முக திறமைகளை கொண்டவர். பான் முக வேடங்களில் நடிப்பில் சிறந்தவர். தமிழ் சினிமாவில் குழந்தையாக நடிக்க தொடங்கி இன்று உயர்ந்த இடத்திற்கு சென்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” படத்தில் கதாநாயகனாக நடித்தார்.  இப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்திற்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கிய படமான இந்தியன்-2 படத்தில் நடித்தார்.

இந்தியன்-1 படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது ,இதனால் இந்தியான்-2 மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது . ஆனால்  இந்தியன்-2 படம் அதை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை.   இந்தியான்-2   படமானது தோல்வி படமாக அமைந்தது.இதற்கு இடையே கல்கி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதுவும் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக வெற்றி பெறவில்லை.இந்த நிலையில் தனது பிறந்த நாளன்று தக் லைஃப் படத்தின் அப்டேட் வழங்கியது படக்குழு , இப் படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

இப் படத்தில் கமலுடன் திரிஷா ,சிம்பு நடிக்க உள்ளார்கள். இந்த  நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் கமல் பற்றிய நிகழ்ச்சியில் டாக்டர் காந்தராஜ்  கமல் பற்றி பேசி இருக்கிறார். இதில் நடிகர் கமல் ஹிந்தி திரையுலகில் கமல் ஹாசனை நடிக்க விடாமல் ஓரங்கட்டியது அமிதாப் பச்சன் என்று பகிரங்கமாக கூறினார்.

இது தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.டாக்டர் காந்தராஜ்  இதற்கு முன்பு நடிகைகள் பற்றி  அவதூறாக  பேசி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.